மேலூரில் பாபு என்பவன் வசித்து வந்தான். அவன் தந்தைக்கு இரண்டு தாரம். பாபு மூத்தாளின் மகன். கோபு இளையவளின் மகன். அவர்களின் தந்தை காலமான பிறகு, கோபு, பாபுவுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டான். பாபு மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. கோபுவோ 5ம் வகுப்பு பாசு. அப்போது பாபுவுக்கு 25 வயது; கோபுவுக்கு 22 வயது. நில தாவாவுக்குக்காக இருவரும் கோர்ட்டுக்குச் சென்றனர். கேசும் போட்டாச்சு. அதுவும் நடந்து கொண்...........டே இருந்தது. காலம் ஓடியது.

பாபுவுக்குக் கல்யாணம் ஆகி பாலன் என்ற மகன் பிறந்தான். பாபுவுக்கு 80 வயது ஆனது. நடக்க முடியவில்லை.
பாபு பாலனைக் கூப்பிட்டு சொன்னார்.
“நான் இனி பொழைக்க மாட்டேன். பீரோவுல இருக்குற கேசு கட்டு பத்திரம். வாய்தாவுக்கு வாய்தா கோர்ர்டுக்குப்போயிரணும். அங்கே கவனிக்க வேண்டியவங்களை எல்லாம் கவனிச்சுக்கணும். முக்கியமா நம்ம ஏட்டயா. ஆமாம். கோபு படிச்சவன். கோக்கு மாக்கு தெரிஞ்சவன். நம்ம வக்கீலைக் கூட அவன் கவனிக்கிறான்னு சொல்றாங்க. பாத்துக்க. சூதானம்.
முக்கியமா இன்னொண்ணு. ஒனக்கு பொறக்கப்போற புள்ளைக்கு கோர்ட்டு விவரம் எல்லாம் சொல்லிக் குடுத்துரு. ஒண்ணோட காலத்தில கேசு முடியல்லைன்னு வச்சுக்க. ஒம்புள்ள கோர்ட்டுக்கு அலயட்டும். அதுக்குள்ள அரசாங்கம் வந்து ரோட்டுக்கு குடு; ஆசுபத்திரிக்கு குடுன்னு கூட எடுத்துக்கிடலாம். அப்போதைக்கு கெடைக்கிறதை ஒம் புள்ள வாங்கிக்கிடட்டும். என்ன பண்ண. பள்ளிக்கூடத்து வாத்தியார் சொன்னார். வெள்ளைக்கரனுங்க நம்ம நாட்ட குடுத்துட்டுப் போகும்போது அவங்க சட்டத்தை வாங்கி நம்ம ஆளுங்க வச்சிக்கிட்டாங்களாம். நம்ம நாட்டுக்கு ஏத்த மாதிரி அதை மாத்தலியாம்.” இப்படிச் சொல்லிவிட்டு பாபு கண்ணை மூடிவிட்டன்.
காசு இருக்கிறவனுக்கும், படிச்சு ஓட்டை சாட்டை தெரிஞ்சவனுக்கும்தான் காலமாப் போச்சு “

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக